வெள்ளி, 3 ஏப்ரல், 2009

அன்பென்பது


அன்பென்பது நீ!

கண் திறந்த நாள் முதல்
என் மீது அன்பைத்தவிர
வேறொன்றும் காட்டியதில்லை

என் முகம் பார்த்தே
உன் நாள் கழிகிறது,

உன் முகம் நினைத்தே
என் ஜீவன் இருக்கும்,

என் குரல் உனக்கு மட்டும்
கீதமானது எப்படி?

உன் குரல் எனக்கு
கீதையானது போலவா?

என் வாசம் உன்னால்
பிரிதரியபடுவது எப்படி?

உன் வாசம் என்னுள்
இருப்பதாலா?

என் வாடிய முகம்
உன் புன்னகை மழையில்
மட்டுமே மலரும்.

உன் சிரிப்பு என் கோபத்தின்
முகவரியை தூர போடுகிறது.

நான் உனக்கு உறவில் அம்மா
நீ எனக்கு மனதால் அம்மா.

நன்றி மகளே ( மகள்களே)
அன்பென்பது நீங்கள் தான்,

11 கருத்துரைகள்:

கோபிநாத் சொன்னது…

மழலையர் கவிதை அந்த மழலையர் மொழி போலவே இருக்கு...அழகாக ;)

அக்கா(கூப்பிடலாம் தானே!!)) ஒரு சின்ன யோசனை..

நன்றாக எழுதுறிங்க...இன்னும் வார்த்தைகளில் கவனம் சொலுத்தினால் இன்னனும் அழகாக வரும்.

***என் முகம் பார்த்தே
உன் நாள் கழிகிறது,

உன் முகம் நினைத்தே
என் ஜீவன் இருக்கும்,***

இங்கு "இருக்கும்" அப்படின்னு படிக்கும் போது போன வரிகளில் இருந்த ஒரு பீல் விலகுற மாதிரி இருக்கு...இங்கும் "கழிகிறது" என்றே சொல்லாம்.

***உன் சிரிப்பு என் கோபத்தின்
முகவரியை தூர போடுகிறது.

தூர போடுகிறது என்பதை விட வேற மாதிரி சொல்லாம்.

உன் சிரிப்பு என் கோபத்தின்
முகவரியை மறக்கிறது.

இது என்னோட தனிப்பட்ட கருத்து...ஏதேனும் தவறாக இருந்தால் வருந்துக்கிறேன். ;)

mayil சொன்னது…

கோபி,

நீங்க தரலாமா என்னை அக்கானு சொல்லலாம்,

முதல்ல ஒரு சிறப்பு நன்றி, சிறு பிள்ளை தனமா இருந்தாலும் இதையெல்லாம் கவிதைனு சொன்னதுக்கு. எனக்கு கவிதையே தெரியாது, படிச்சதும் இல்லை,

இத்தனை வருசமா பிசினஸ், படிப்புன்னு இருந்து விட்டேன், இப்பதான் இதெல்லாம் வேண்டாம்னு குழந்தைகளுடன் ( மூன்று மாதமாக) இருக்கேன். நெறைய நேரம் இருப்பதால் போரடிக்காமல் இருக்கத்தான் இந்த அலும்பு.

நீங்கள் சொன்னதை கண்டிப்பா பின்பற்றுவேன்.

இந்த பதிவுகளையே பிசினஸ் பதிவுகளா மாத்தலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

நன்றி கோபி உன் அக்கரைக்கு .

mayil சொன்னது…

கோபி, என் கவிதை, கவிதை தொகுப்புக்கு நான் வைச்ச பேர், அலும்பு இதாவது நல்லா இருக்க?

கோபிநாத் சொன்னது…

\\இந்த பதிவுகளையே பிசினஸ் பதிவுகளா மாத்தலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன். \\

அய்யோ.!! மொத்தமாக மற்றமால் பிசினஸ் சம்பந்தமாக தனியாக லேபிள் வச்சி பதிவுகள் போடுங்கள்.

\\mayil சொன்னது…
கோபி, என் கவிதை, கவிதை தொகுப்புக்கு நான் வைச்ச பேர், அலும்பு இதாவது நல்லா இருக்க?

April 4, 2009 6:12 AM \\

;-))) அலும்பு நல்லாதான் இருக்கு.. ;)))

narsim சொன்னது…

//என் வாடிய முகம்
உன் புன்னகை மழையில்
மட்டுமே மலரும்.//

அலும்பு.

mayil சொன்னது…

நன்றி நர்சிம், அடிக்கடி வாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

நான் உனக்கு உறவில் அம்மா
நீ எனக்கு மனதால் அம்மா

ம், ஆழமான உண்மை.

SK சொன்னது…

இது கவிதை சாயலில் எழுதப்பட்டு இருப்பதால் நான் ஜகா வாங்கிக்கிறேன் :)

mayil சொன்னது…

நன்றி அமித்து அம்மா,

sk இதானே வேணாம், இத போய் கவிதைனு சொன்ன நிஜ கவிதையை என்ன சொல்லுவே?

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] சொன்னது…

அன்பின் அருமையான வெளிப்பாடு...
வாழ்த்துக்கள்....
தொடருங்கள்... உங்கள் பயணத்தை...

அன்புக்கு அலும்பென்று பெயரிட்டால்...
அலும்பும் போது... என்ன பெயரிடுவதோ?

Savitha சொன்னது…

nalla kavithai..amma.....ivlo naal ungala gavanikaama vitutaen, inimel adikadi varuvaen...

கருத்துரையிடுக