இதுவரை மயில் என்ற புனைபெயரில் எழுதிய நான் இனிமேல் விஜி என்று தொடர எண்ணியுள்ளேன். இந்த வீட்ட காலி பண்றேன், எல்லாரும் புது வீட்டுக்கு வாங்க...
நன்றி...http://ojasviviji.blogspot.com/ இந்த முகவரிக்கு வாங்க.. வரும்போது ஸ்வீட், ( எனக்கு லட்டு ரொம்ப பிடிக்கும், அதிரசம், போளி பிடிக்கும்) வாங்கிட்டு வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்...
வியாழன், 16 ஜூலை, 2009
திங்கள், 13 ஜூலை, 2009
சிக்கன் லாலிபாப்

சிக்கன் லாலிபாப்
தேவையான பொருட்கள்:
சிக்கன் லாலிபாப் - 10
தயிர் - 1 பெரிய ஸ்பூன்
இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 1 பெரிய ஸ்பூன்
மிளகாய் தூள் ,
மஞ்சள் தூள்
உப்பு
முட்டை - 1
கார்ன்பிளவர் - 100 கிராம்
பிரட் தூள் - 200 கிராம்
செய்முறை
சிக்கன் நன்றாக கழுவி சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது , முட்டை, தயிர், கார்ன்பிளவர் கொஞ்சம் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் வைக்கவும்.
கார்ன்பிளவர், பிரட் தூள் இரண்டும் கலந்து வைக்கவும்
சிக்கன் லாலிபாப் ஒன்று ஒன்றாக இந்த கார்ன்பிளவர், பிரட் தூள் கலவையில் புரட்டி சூடான எண்ணையில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
என்ஜாய் யுவர் லாலிபாப் - வால் பையன் இந்த சைடு டிஷ் ஓகே வா?
வெள்ளி, 10 ஜூலை, 2009
வேலை வாய்ப்பு
சிவகங்கையில் இருக்கும் தேங்காய் நாரில் இருந்து விவசாய மூலப்பொருள் ஏற்றுமதி செய்யும் எங்கள் நிறுவனத்திற்கு டிகிரி படித்த சிவகங்கையில் நிரந்தரமாக இருக்க விருப்பம் உள்ளவர்கள் தேவை. பதவி : commercial executive, பதவி - 7,000 முதல் 10,000 வரை தகுதிக்கேற்ப தரப்படும். freshers can also apply : dpiwanted@gmail.com
லேபிள்கள்:
job,
வேலை வாய்ப்பு
செவ்வாய், 7 ஜூலை, 2009
கற்றதும் பெற்றதும் - நூறாவது பதிவு
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எழுத துவங்கி இன்று நூறு பதிவு ஆயிடுச்சு..நல்லத்தான் இருக்கு.. இப்படி ஒரு தனி உலகம் இருப்பதை காணவே ரொம்ப அதிசயமாக இருந்தது..முகம் தெரியாத மனிதர்களின் ரசனைகள், விருப்பங்கள், எண்ணங்கள், எழுத்துக்கள், (சண்டைகள்!!) ..... இதன் மூலம் கற்றது, பெற்றது, புரிந்து கொண்டது, இன்னும் அறிய விரும்புவது, இழந்தது... ஒரு கொசுவர்த்தி...
கற்றது:
நிறையா.......அதிலயும் எங்கள் அம்மாக்களின் வலைப்பூ எனக்கு மிக பிடித்த தளம், ஒவ்வொரு அம்மாவும் தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் தளம்.. நன்றி முல்லை. இன்னும் நெறைய எழுதுங்கள், நெறைய அம்மாக்களை சேர்த்துங்கள், நம் உலகம் அழகாவது நம் குழந்தைகளால்...
அப்பறம், பொதுவாக எல்லா பதிவர்களின் எழுத்துகளிலும் தெரியும் ஆர்வம் நம்மையும் தொடர்ந்து நம் கருத்தை பதிய உறசாகம் அளிக்கிறது.
பெற்றது:
நல்ல நட்புகளையும் அறிமுகங்களையும் , இது வேறு எந்த துறையிலும் இல்லாத ஒரு விஷயம். எந்த ஊருக்கு போனாலும் நம் பதிவர்கள் என்ற உறவு வட்டம் இருக்கும் போல.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த முறை ரொம்ப நல்ல இருக்கு.
புரிந்து கொண்டது:
அதே உலகத்தைதான், நாம ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை என்றாலும் சிலரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை அளித்து, இன்னும் ஜாக்கிரதை உணர்வை வளர்த்துள்ளது.
அறிய விரும்புவது:
அதற்க்கு எல்லை இருக்கா? இருந்தாலும் இந்த பதிவுலகில் நல்ல படைப்புகள் ஏராளம், எனக்கு அறிமுகம் ஆனது ரொம்ம்ப கொஞ்சம். நல்ல படைப்புகளை அறிமுகபடுத்துங்கள்...
இழந்தது:; அது எதுக்கு??? ஒண்ணும் இல்லை...
போன வாரம் இந்த 100 வது பதிவுடன் நிறுத்தி விட எண்ணி இருந்தேன். ஆனால் நேரம் அனுமதிக்கும் வரை எழுதி தள்ள முடிவு பண்ணி களத்தில் இருக்கிறேன். இதுவரை ஒண்ணும் உருப்படியா எழுதலை, இனிமேல் முயற்சி செய்யறேன்.
நன்றி.
பெற்றோரும் பள்ளியும்
இரண்டு நாள் முன்பு என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்க தேர்வுக்கு வரும்படி அழைத்திருந்தார்கள். இது ஒரு பெரிய வங்கி நடத்தும் பள்ளி, சென்ற வருடம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பள்ளியின் கட்டணங்கள் 50 சதவிகிதம் அதிகபடுத்தப்பட்டது. உடனே பொங்கி எழுத பெற்றோர் பள்ளிக்கு எதிராக சிறிய போராட்டம், உண்ணா விரதன், கலெக்டரிடம் மனு, நாளிதழில் பேட்டி, பள்ளியின் முன் மறியல் என்று எல்லாம் செய்துவிட்டார்கள். பள்ளியோ தெளிவாக அவர்கள் நிலையை எல்லா பெற்றோர்களுக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் தெரிவித்து விட்டார்கள்.
பெற்றோரின் புகார்கள்:
பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இல்லை,
பள்ளி ரொம்ப வருடமாக புதுப்பிக்க படவில்லை,
கேன்டின், டாய்லெட் நன்றாக இல்லை,
இதில் பள்ளி தரப்பு விளக்கம்,
இந்த வருடம் பள்ளியின் கட்டிடங்கள் சீரமைக்கப்படும்,
இரண்டாம் வகுப்பு வரை வேறு இடத்தில் செயல்படும் பள்ளியும் அடுத்த வருடம் இந்த வளாகத்தில் இணைக்கப்படும்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம் உடனே துவக்கப்படும்
அரசு ஆறாவது திட்ட சம்பளம் தருவதால் அந்த அளவிற்று இங்குள்ள ஆசிரியர்களுக்கும் தர வேண்டும், வேறு எந்த வருமானமும் பள்ளிக்கு இல்லாததால் வேறு வழியன்றி கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறினர்.
இப்போது பள்ளி கட்டிடம் சீரமிக்கப்ப்ட்டு விட்டது, மொத்தத்தில் ஆயிரம் ரூபாய் மட்டும் ஒரு மாணவர்க்கு குறைத்து உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் நடத்த போன வாரம் அழைத்து இருந்தனர். ஒரு தெலுங்கு பட பாணியில் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளி செய்த தவறு முன் அறிவிப்பின்றி கட்டணம் உயர்த்தியது. ஆனால் அந்த தேர்தல் அன்று வந்த பெற்றோர் மிக அநாகரிகமான முறையில் ஆசிரியர்களை பேசியதுடன், பெற்றோர்களையும் பள்ளியின் உள்ளே விடாது கோஷம் எழுப்பினர். என் நிலைப்பாடு இதில் நமக்கு விருப்பம் இருந்தால், முடிந்தால் இந்த பள்ளியில் தொடர்வது, அல்லது அடுத்த வருடம் அமைதியாக வேறு பள்ளி மாற்றுவது என்று இருந்தேன். மேலும் கட்டணங்கள் செலுத்திய 4000 பெற்றோர் அமைதியாக இருக்கின்றனர், செலுத்தாத 200 பெற்றோர் இந்த போராட்டங்களில் உள்ளனர்.
அன்று மாலை ஐந்தரை மணியில் பள்ளிக்கு சென்றேன், உள்ளே அனுமதிக்காமல் பெற்றோர் கோஷமெழுப்பினர், பெரும்பாலான பெற்றோர் உள்ளே சென்று விட்டனர், நானும் என் பெரிய பெண் படிக்கும் வகுப்புக்கு சென்றேன், யாருமே இல்லை, கிட்டத்தட்ட 50 பேர் இருக்கும் வகுப்பில் நான் மட்டுமே இருந்தேன், எந்த பெற்றோரும் வரவில்லை என்று நினைத்தேன், சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறி சென்றார். திடீர்னு ஒரு கும்பல் வந்து வகுப்பினுள் இருந்த பெற்றோரை வெளியில் வரும்படி மிரட்டியது. என்னிடமும் ஒரு முறை சொல்லிவிட்டு சென்றனர். நான் ஆசிரியரிடம் பேசிக்கொண்டு இருந்ததால் அங்கேயே இருந்தேன் மறுமுறை வந்த கும்பல் வெளியில் வரும்படி சத்தம் போட்டனர், எனக்கு கொஞ்சம் கோபம் வந்து விட்டது, அவர்களிடம் நீங்கள் என்னை கட்டாயபடுத்த முடியாது, நான் வெளியில் வர முடியாது என்று மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெற்றோர் அவர்களின் வேலையை விட்டு அந்த நேரத்தில் பள்ளியில் கூடும் போது யாரோ சிலரால் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் பள்ளி நிர்வாகம் அந்த தேர்தலை தள்ளி வைத்துவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மிகவும் சத்தம் போட்டு ரொம்ப அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.
பாதிக்கப்படுவது தங்கள் பிள்ளைகள் என்பதை மறந்து விட்டனர், விருப்பமில்லா விட்டால் வேறு பள்ளியில் சேர்ப்பதுதான் வழி, அதை விட்டு இந்த முறை எதில் கொண்டு சேர்க்கும்???

என் பார்வையில்,
பள்ளி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)